Breaking News
recent

ஹமாஸின் செய்தி தொடர்பாளராக முதன் முதலாக பெண் நியமனம்!


மாஸ் இயக்கம் தனது அதிகாரபூர்வ பேச்சாளராக ஒரு பெண்ணை நியமித்திருப்பது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இனிமேல் இவரே சர்வதேச ஊடகங்களுக்கு ஹமாஸின் கருத்துக்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவார்.

23 வயதான இஸ்ரா பிரித்தானிய ஆங்கிலத்தில் சரலமாக பேசக்கூடயவர். இவர் ஹமாஸ் இயக்கத்தில் ஆரம்பத்திலிருந்து வளர்ந்து வந்தவரல்ல என்பதும் இவர் தனது அலுவலகத்தில் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் புகைப்படத்தை தொங்கவிடாமல் இருப்பதும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற விஷயங்கள்.



‘நான் ஹமாஸ் இயக்கத்தைச் சார்ந்தவளல்ல, தனது நாட்டை நேசிக்கும் ஒரு பலஸ்தீன செயற்பாட்டாளர்.’ என்கிறார் இஸ்ரா.

‘ஹமாஸ் மேற்கு நாடுகளுக்கு ஒரு அந்நிய சக்தியாக காட்டப்படுகிறது. இது இஸ்ரேலிய ஊடகங்களின் பணி. அவர்களது ஊடகங்கள் மிக தந்திரமானது. அவர்கள் உண்மையை மாற்றிவிடுகிறார்கள்.

பலஸ்தீன் தொடர்பாக எதிர்மறையான கருத்தை உலகிற்குப் பரப்புகிறார்கள். நான் ஏற்றிருக்கும் பணி மிகப் பொறுப்பு வாய்ந்தது. சாதாரண நிலையிலேயே ஒரு அரசாங்கம் சார்பாக பேசுவது இலகுவான காரியமல்ல. ஆனால், நான் பொறுப்பேற்றிருப்பது ஒரு முக்கியமான சூழ்நிலையில்’ என்கிறார் இஸ்ரா.

உலக போராளிகள் இயக்கத்தில் ஹமாஸிற்கு என்ற தனி இடம் உண்டு. பாலஸ்தீன மக்களின் தன்னார்வு இயக்கமான கல்வி மருத்துவம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வந்த இயக்கம் பி எல் வோ வின் வீழ்சிக்கு பிறகு பலஸ்தீன சுதந்திர போராட்டத்தை கலத்தில் இருந்து போராடும் இயக்கமாக மாறியது. 

இன்றுவரை இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பி நாட்டிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் போராளிகள் அமைப்பு. இன்டிபாதா என்ற பலஸ்தீன எழுற்சி போராட்டத்தின் மூலம் பாலஸ்தீனின் மக்கள் அனைவரையும் போராட்ட கலத்திற்கு கொண்டு வந்த அமைப்பு. 

அல் கசாம் என்னும் சொந்த ராக்கெட்டை தயாரித்த முதல் போராட்ட அமைப்பு. இன்றுவரை பல தொழிநுட்ப மேம்பாடுகளை செய்து இஸ்ரேல் என்ற எதிரியை பெரும்பாலும் சொந்த ராக்கெட்டின் மூலம் தான் தாக்கி வருகிறது. இதை விட சிறப்பு என்னவெனில் இந்த அமைப்பில் உள்ள போராளிகள் தலைவர்கள் என பல தரப்பிலும் பெரும்பாலும் மருத்துவர்கள் பொறியாளர்கள் என பல படித்த மக்களை கொண்டே செயல்படுகிறது. 


இவர்களின் ஒரே நோக்கம் பாலஸ்தீன் இழந்த அனைத்து இடங்களையும் மீட்பது மட்டுமே. இத்தனை சோதனைகளுக்கு பின்னர் பல தலைவர்களின் , மரணத்திற்கு பின்னரும் கூட இன்றுவரை பலஸ்தீன மக்களின் கனவான இதில் இருந்து மாற்றுக்கருத்தை கூறியதே கிடையாது. இறைவன் நாடினால் இவர்களின் போராட்டம் நிச்சயம்  வெற்றி பெரும். அந்த நாள் உலகின் மிகப்பெரும் சர்வாதிகாரம் வீழ்ந்த நாளாக இருக்கும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.