Breaking News
recent

கஸ-கஸாவுக்கு சவுதி அரபியாவில் தடை செய்யப்பட்டது ஏன்?




அன்பானவர்களே பாலஸ்தீனத்தில் உள்ள காஸா இல்லை. உணவில் சேர்க்கப்படும் ஒருவகையான வாசனைத்திரவியமே “கஸ-கஸா” என்பதாகும்.
நாம் மாமிச உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் கஸகஸா இதில் போதை இல்லை என்றாலும் இதனுடைய குடுவையே கடுமையான போதையாகும்.
இதோ படத்தில் அம்புகுறி போட்டு இருக்கும் அதுவே கஸகஸாவின் காய். பார்ப்பதற்கு மாதுளை காயை போன்று இருக்கும் இது வெயிலில் காய வைத்து உடன் அதன் உள்ளே இருப்பதுதான் கஸகஸா.
இந்த காய் காய்ந்த உடன் கஸகஸ நிறத்திற்கே மாறியதை போஸ்கா பட்டை என்று சொல்லுவார்கள் இதுதான் கடுமையான போதையாகும் சாராயத்தில் முக்கிய பொருளாக இது கருத படுகிறது சாராயத்திற்கு தேவையான மூல பொருள்களான கசிவு சர்க்கரை .
பெரிச்சை ..கடுக்காய் ..பேட்டரி .சட்டி.. நமச்சாரம் போஸ்கா பட்டை இந்த போஸ்கா பட்டை இல்லாமல் சாராயம் காய்ச்சுவது கடினமே கடைகளில் இந்த மூல பொருள்கள் அனைத்தும் விற்க அனுமதி உண்டு எனில் போஸ்கா பட்டை மட்டும் விற்க அனுமதி கிடையாது.
மற்ற பொருள்கள் மருத்துவ குணம் கொண்டவைகள் அதை விற்கலாம் இதில் நமச்சாரம் என்பது நாக்கில் வைத்தால் மின்சாரத்தை போல விர்ருன்னு ஏறும் இந்த நமச்சாரமே பெப்சி, கொகோ கோலாவில் கலக்கபடும் மூல பொருள்களில் இதுவும் ஒன்று என்பதை அறியவும்.
தமிழக அரசு மது விளக்கு காலங்களில் பரம்பரையாக குடித்து கொண்டு இருப்பவர்களுக்கு கை நடுக்கம் ஏற்படும் அப்போது அவர்களுக்கு கை கொடுக்கும் இந்த போஸ்கா பட்டை இதை ஒரு சில மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணியை குடித்து போதை ஏத்தி கொள்வார்கள் இந்த குடிகாரர்கள் அதுதான் பட்டை சாராயம் என்பது இப்போது தெரிகிறதா சௌதியில் கஸகஸா வுக்கு தடைஎன்று?
நல்லவனாக இருக்கும் ஒருவன் தீயவனோடு சேர்ந்து இருந்த காரணத்தால் நல்லவனையும் கெட்டவனாக பார்க்கும் உலகத்தை போல இந்த கஸகஸாவின் நிலமை.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.