Breaking News
recent

உலகில் முதன்முதலாக மூலிகையால் உருவாக்கப்பட்ட புனித குர்ஆன் !



துபாயைச் சார்ந்த ‘ஹீடிம் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனம், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை முழுக்க முழுக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டே தயாரித்திருக்கிறது. இதனை வடிவமைத்துள்ளவர், யுனானி மருத்துவரான ஹம்டி தாஹெர்.

606 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் 7.5 கிலோ எடை கொண்டது. யுனானி மருத்துவத்தில் பின்பற்றப்படும் மருத்துவ முறைகளைக் கொண்டே, புத்தக உருவாக்கத்துக்கான மூலிகைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. 


இயற்கையாகக் கிடைக்கும் பழம், இலை, மரப்பட்டை, வேர் போன்றவற்றை அரைத்துக் கலவையாக்கி எழுத்து, தலைப்பு, பார்டர், பக்க எண், கோடு என்று அந்த நூலின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு அச்சும் மனிதர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் எந்த பிரின்டிங் டெக்னாலஜியும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் சிறப்பு. குரானை வாசிப்பவர்கள் விரலை புத்தகத்தில் வைத்து வாசிக்கும் போது, அந்த மூலிகைகளின் பலன், வாசிப்பவரை சென்றடையும்.


இந்நூல் துபாயில் உள்ள ரெட் அவென்யூ பில்டிங்கில் டிசம்பர் 11-ம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்பட்டது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.