Breaking News
recent

8-ம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்: இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்!


8-ம் வகுப்பு பொதுத் தேர்வு (இஎஸ்எல்சி) ஜனவரி 4-ம் தேதி தொடங்க உள்ளது. இத்தேர்வுக்கு அரசுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், அரசு சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 27-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) முதல் www.tngdc.gov.in என்ற இணைய தளத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யும்போது, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்பப்படாது என்று அந்த செய்தி குறிப்பில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : தி இந்து
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.